பேப்பர் ப்ளேட் தொழில்
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம். வட இந்தியாவில் மிக குறைந்த விலையில் மெஷின் கிடைக்கின்றது.இந்த மெஷினை மிக இலகுவாக இயக்கலாம்.
மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் லாபம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.
இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற தொழில் இது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்.
இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி சாதாரண மின் இணைப்பு .
உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர் GSM Paper 80gsm to 140 gsm மற்றும் பேக்கிங் கவர், லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை வட இந்தியாவில் மலிவாக கிடைக்கின்றன.
கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், Wine Shops,அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.
Fully Automatic Machine.
உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். ரோலாக உள்ள பேப்பரை மெஷினில் இணைத்து
விட்டால் தானாக அச்சிட்டு கட் செய்து கொண்டு ப்ளேட்டாக நமக்கு தந்து விடும்.ஒரு
நபர் மட்டும் போதும். சிங்கில் டை,மற்றும் டபுள் டையும்
உண்டு.
Manual Automatic Machine
தயாரிப்பது எப்படி?
கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும். பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.
பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.
உற்பத்தியை வட இந்தியாவிலும்
விற்கலாம்,ஏனென்றால் அங்கு அதிகமாக பயன் படுத்தபடுகிறது.
4”
ப்ளேட் முதல் 12” ப்ளேட் வரை தயாரிக்கலாம். ஒரே
மெஷினில் தயாரிக்கலாம். தனி மெஷிங்களும் உண்டு.
டோனா ப்ளேட் எனப்படும் மலிவு விலை ப்ளேட் வட இந்தியாவில் விற்க்கபடுகிறது.
சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க,மற்றும் தொடங்கியவர்கள் ஆலோசனைகள் பெற தொடர்பு கொள்ளவும்.
சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க,மற்றும் தொடங்கியவர்கள் ஆலோசனைகள் பெற தொடர்பு கொள்ளவும்.
Emai: peperplatemachine@gmail.com